ஒரே மெயில்… திடீரென மூடப்பட்ட கோவை ஐடி நிறுவனம் – போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்!

கோவை ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அந்த ஐடி நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அந்த பணியாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கோவை ஐடி ஊழியர்கள் போராட்டம்

இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் வழங்கு..”, “கைது செய்.. கைது செய்..”, “எங்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை உடனே வழங்கு” போன்ற கோஷங்களை எழுப்பினர். “அந்த நிறுவனம் எங்களுக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்காமல் காத்திருப்பில் வைத்துள்ளது.

கோவை ஐடி ஊழியர்கள் போராட்டம்

அவர்களிடம் சம்பள தொகையை பெற்று தர வேண்டும். அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு செட்டில்மென்ட், கிராஜுவிட்டி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும்.” என்று அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “அங்கு சுமார் 2,000 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த சனிக்கிழமை திடீரென  நிறுவனத்தை மூடப்போவதாக மின்னஞ்சலில் கூறினார்கள். அதற்கான காரணத்தை சொல்லவில்லை. இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம். எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன.

ஊழியர்களுக்கு வந்த மெயில்

நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை. இங்கு இருக்க கூடிய மேனேஜர்களுக்கே எந்த தகவலும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு வரவேண்டிய சம்பளம், செட்டில்மென்ட், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்.” என்றனர்.

இந்நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை கொடுப்பதாக அந்த நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது.

மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு செட்டில்மென்ட், கிராஜுவிட்டி உள்ளிட்ட நிலுவை தொகை அனைத்தும் வழங்கப்பட்டும் என உறுதி அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs