கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் கேரள மாநிலம் கோழிப்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் அரசுப்பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, திடீரென எதிரில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த செந்தில்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே கடந்த 26-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, செந்தில்குமாரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
செந்தில்குமாரின் கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இந்த தானம் மூலம் 5 பேருக்கு மாறுவாழ்வு கிடைத்துள்ளது.

செந்தில்குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா மற்றும் ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs