அந்நிய செலாவணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகம் நடக்கிறது. அதனால், நம் கையில் இருக்கும் அந்நிய செலாவணி குறைந்து வருகிறது. இதுவும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவிற்கு ஒரு காரணம் ஆகும்.
பணவீக்கம் அதிகம், மக்களின் வாங்கும் திறன் குறைவு ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது, இந்தத் தருணத்தில் மத்திய அரசு ஏற்றுமதி பக்கம் கட்டாயம் சிந்தித்து ஆக வேண்டும்.
இன்னும் ஒரு சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் ஆகப்போகிறது. இந்தப் பட்ஜெட்டில் ஏற்றுமதிகளுக்கு திட்டங்கள், வரி சலுகைகள் கிடைக்கும் என ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
இதுக்குறித்து முன்பே, ஏற்றுமதியாளர்கள் நிதி அமைச்சகத்தோடு சந்திப்பை நிகழ்த்தியிருந்தது.
தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. இந்தப் பிரிவுகளை ஊக்குவிக்கும் விதமாக, இதற்கு முன்பான பட்ஜெட்டுகளிலும் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பட்ஜெட்டிலும் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஏற்றுமதியாளர்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில்…
-
அடமானம் இல்லாத கடனின் அளவு அல்லது கடனின் உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம்.
-
இவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வழி செய்யப்படலாம்.
-
கடனுக்கான வட்டி விகிதத்தில் சலுகைகள் கிடைக்கலாம்.
-
பொருட்கள் அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்யும்போது, அதில் சலுகைகள் கிடைக்கலாம்.
இந்தப் பட்ஜெட்டில் கட்டாயம் ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களுக்கு திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இப்போதைய இந்திய பொருளாதார நிலைக்கு இது முக்கியமாகும் என்கிறார்கள் பொருளாதார் ஆய்வாளர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs