செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
ரெய்டு மூலம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி தரப்படுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன், “யார் யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. திமுக, அதிமுக தரப்பில், பணம் இருப்போரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இதற்கும், கூட்டணி வற்புறுத்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
ரெய்டு மூலமாக மிரட்டல் விடுத்தது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். பிற கட்சிகளை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பேசினாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.