தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் பந்தயம் நடத்துகிறது சீனா.
தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ரோபோட்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இந்த போட்டியில் 12,000 மனிதர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Man vs Robo
இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள ரோபோட்க்கள் பார்க்க மனிதர்களைப் போல இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விதிமுறை. இரண்டு கால்களில் நிற்கவும் நடக்கவும் ஓடவும் முடிய வேண்டும்.
ரோபோட்கள் கால்களாலேயே ஓட வேண்டும். சக்கரங்களைப் பயன்படுத்தக் கூடாது. அவற்றின் உயரம் 1.6 அடியிலிருந்து 6.5 அடிக்குள் இருக்க வேண்டும். கால்களின் உயரம் குறைந்தபட்சம் 1.5 இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
A half marathon for #humanoid robots will be held in Beijing in April. The humanoid robot “Tiangong,” with an average speed of 10 km/h, is slated to participate in the race. #FutureChina pic.twitter.com/wR8di7P3hm
— China Xinhua Sci-Tech (@XHscitech) January 17, 2025
இந்த பந்தயத்தில் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் முழுமையான ஆட்டோமேட்டிக் ரோபோட்க்கள் பங்குபெறலாம். ரோபோட்களை இயக்குபவர் போட்டியின் நடுவில் பேட்டரிகளையும் மாற்றிக்கொள்ளலாம்.
சீனாவின் உள்ளடங்கிய செயற்கை நுண்ணறிவு ரோபாட்டிக்ஸ் கண்டுபிடிப்பு மையம் (China’s Embodied Artificial Intelligence Robotics Innovation Center) உருவாக்கிய Tiangong என்ற ரோபோ இந்த போட்டியில் பங்குபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tiangong கடந்த ஆண்டு நடைபெற்ற பெயிஜிங் மாரத்தான் போட்டியில் முதல் மற்றும் கடைசிக் கட்டங்களில் மனிதர்களுடன் ஓடியது. ஆனால் முழுமையாக ஒரு ரோபோட் தொடக்கம் முதல் இறுதிவரை ஓடுவது வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் இந்த மாரத்தானில்தான் முதன்முறை நடக்கிறது.
சீனாவில் மனித உருவ ரோபோட்கள்!
சீனாவில் பெருகிவரும் மக்கள்தொகை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்குச் சவாலாக மாறியிருக்கிறது. நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் வேலை செய்யும் மக்கள் விகிதம் குறைந்துவிட்டது.

இந்த இடைவெளியை நிரப்ப மனித உருவ ரோபோட்கள் பெருமளவில் உதவக்கூடும் என நினைக்கிறது சீன அரசாங்கம். உலக அரங்கில் அமெரிக்காவுடன் போட்டிப்போட இதைச் சிறந்த முன்னெடுப்பாகப் பார்க்கின்றது சீனா.
2023 நிலவரப்படி, உலகம் முழுவதிலும் உள்ள ரோபோட்களில் 51% சீனாவில்தான் உள்ளது. 2,76,288 ரோபோட்கள் நிறுவப்பட்டுள்ளன. ரோபோட்களுக்கான முன்னெடுப்பின் அடுத்தகட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் பிரத்யேக விளையாட்டுப் போட்டியை நடத்தவும் சீனா திட்டமிட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb