“மக்கள் பிரச்னைகளை நடிகர் விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது..!” – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ரூ.58 கோடி நிலுவை பணம் உள்ளது. இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மத்திய அரசு நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் பணியை செய்கிறது. தெருநாய் பிரச்னை அதிகளவில் உள்ளது. மத்திய அரசின் எஸ்.ஓ.பி., வழிகாட்டுதல் இருப்பதால் நாய்களை கட்டுப்படுத்துவதில் நிறைய விஷயங்களை செய்ய முடியவில்லை. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிறைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவது வரவேற்கதக்கது. விமான நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு நான்கு இடங்களை தேர்வு செய்தது. அதிலிருந்து 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இங்கு அரசியல் செய்வதை விட தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கவேண்டும். நடிகர் விஜய் பா.ஜ.க,வை எதிர்த்ததால் ‘இண்டியா’ கூட்டணிக்கு அழைத்தோம். நாம் தமிழர் சீமான், பெரியார் குறித்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.