கோவை : வழக்குப்பதிவு… இரவில் சாலை மறியல்; வெடிக்கும் பீப் கறி விவகாரம்

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி – ஆபிதா தம்பதி தள்ளு வண்டியில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி என்பவர்,

சுப்பிரமணி

“இங்கு பீப் விற்பனை செய்யக் கூடாது” என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. கோயில் அருகே இருப்பதாலும், ஊர் கட்டுப்பாடு என்பதாலும் அங்கு பீப் கடை இயங்க அனுமதி இல்லை என்று சுப்பிரமணி கூறினார். 

இதற்கு ரவி – ஆபிதா தம்பதி, “அவர்கள் சொன்னதால் கடை போடும் இடத்தை மாற்றிவிட்டோம்.  ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த தொழிலை தான் நாங்கள் செய்ய முடியும். இதேபோல காவல்துறையும் மிரட்டுகிறார்கள்.” என்று கூறியிருந்தனர்.

ரவி – ஆபிதா

அவர்களுக்கு ஆதரவாக பெரியாரிய, இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மீது புகார் அளித்தனர். மேலும் பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து துடியலூர் காவல்துறையினர் சுப்பிரமணி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்தனர். இதைக் கண்டித்து பாஜக-வினர் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சுப்பிரமணி வீட்டின் உள்ளே சில நபர்கள் சென்று தகாத வார்த்தைகளில் பேசி பொருள்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

கோவை பீப் விவகாரம்
கோவை பீப் விவகாரம்

காவல்துறையினர் சுப்பிரமணி வீட்டில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs