இரண்டாண்டுகளுக்கு முன்பு, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த இளைஞருக்குச் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், பரங்கிமலை காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யப்பிரியா கடந்த 2022, அக்டோபர் 13-ம் தேதி வழக்கம் போல கல்லூரிக்குச் செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது, மாணவி வசித்துவந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்றார். அதைத்தொடர்ந்து, தலைமறைவான சதீஷை போலீஸார் கைதுசெய்யவே, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. அதோடு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் வழக்கு விசாரணையும் நடைபெற்றுவந்தது.
இதில், சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 27), மகளிர் சிறப்பு நீதிமன்றம் சதீஷை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை விவரங்கள் டிசம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சதீஷுக்கு நீதிபதி ஸ்ரீதேவி இன்று மரண தண்டனை விதித்திருக்கிறார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…