2024 Erode Rewind: கோட்டை பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் டு குதிரைச் சந்தை! | Photo Album Posted on December 30, 2024 by Thagadur ஈரோட்டுக்கு அரசு முறை பயணமாக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஈரோடு கோட்டை பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா: ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு ஆச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். ஈரோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு சம்பத் நகர் உழவர் சந்தையில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு சம்பத் நகர் உழவர் சந்தையில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார் அப்போது பொதுமக்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர் ஈரோட்டில் மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலை கொல்லம்பாளையம் அருகே பொதுமக்களால் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தில் வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஈரோடு சோலாரில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மதி எக்ஸ்பிரஸ் வாகனத்திற்கான சாவியை பயனாளியிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு சோலாரில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் ஈரோடு வந்த புதிய வழித்தட வந்தே பாரத்: எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் சேவையினை தொடங்கி பெங்களூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி பச்சைக் கொடி அசைத்து ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் துவக்கி வைத்தார். தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். ஈரோடு எம்.பி.கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு குழந்தைகளின் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில். வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பைசா பதாகை அதுகுறித்து விளக்கம் அளித்தார் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற குதிரைச் சந்தை… இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் எடுத்த காட்சி ஈரோடு ரூ.7.57 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் ஓடுதளம் (செயற்கை ஓடுதளம்) மற்றும் புனரமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா நினைவு நாளை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அவருடைய திருவருள் படத்திற்கு திராவிட கழக தலைவர் கி வீரமணி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp