மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!

வாசகிகளை பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உற்சாகப்படுத்தும் அவள் விகடன், சக்தி மசாலாவுடன் இணைந்து சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் கோயில் மாநகரமாம் சங்கத்தமிழ் வளர்த்த உணவுத் தலைநகரம் மதுரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களுடன் சில ஆண்களும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

ஒருபக்கம் சமையல் போட்டி, மற்றொரு பக்கம் அவர்களின் சமையல் அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு என கலர்ஃபுல்லாக நடந்தது.

முதல் கட்ட தேர்வுக்காக தேங்காய்ப்பால் சாதம், மட்டன் கோலா குழம்பு, சக்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம், உளுந்து மூங்கிலரிசி சாதம், சீரகச்சம்பா தக்காளி, பிரண்டை தொக்கு, கேழ்வரகு கருப்பட்டி அல்வா, செட்டி நாட்டு முட்டை கிரேவி, மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு, சுண்டைக்காய் குழம்பு, சேம்பு பொரியல், துவரம்பருப்பு துவையல், முருங்கை கீரை சப்பாத்தி, கவுனி அரிசி பொங்கல், ராகி, கம்பு பனியாரம் என அசத்தியிருந்தார்கள். அந்த உணவுகள் குறித்து கேட்டறிந்து, சுவை பார்த்து அடுத்தகட்ட நேரடி சமையல் போட்டிக்கான 10 போட்டியாளர்களை செஃப் தீனா தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து 10 போட்டியாளர்களும் சமையல் செய்யத் தொடங்கினார்கள். இதில், ஆயிசத் அகானா சிக்கன் 65 கிரேவி, பனீர் பட்டர் மசாலா, கோதுமை பூரி, கோதுமை சப்பாத்தி செய்தார்.

கவிதா பனீர் மசாலா, ஜவ்வரிசி கை வடையும், சசி, பனீர் கருப்பட்டி சீம்பால், பனிவரகு , சக்கரவல்லி கிழங்கு, சாம்பார் சாதம், சிக்கன் பனீர் கிரேவியும், பூங்கொடி, பிஸ்பில்லாபாத், பனீர் ரசமலாயும், ஆசியா தாகிரா, பனீர் பட்டர் மசாலா, வெல்லாகேசரி, பனீர் பஜ்ஜியும், பத்ம பிரபா, ராகி பர்பி, தினை பனீர் கிச்சடி, ஆப்கான் பனீர் பொலானியும், சின்னதுரை, சேமை வெண் பொங்கல், சொத் இந்தியன் சாம்பார், உருளைக்கிழங்கு வருவல், கேரட் பீன்ஸ் பொரியல், பாலக் பனீர், பனீர் 65, மில்லட் சுவிட் பொங்கல், மூந்தால் பாயசமும், அஞ்சும், வெஜ் புலாவ், பாலக் பனீரும், வென்னிலா வாசு, பனீர் பர்பி, ஜப்பான் சிக்கன், சுகன்யா குதிரைவாலி பாயசம், ஸ்மோக்கி பனீர் வித் வத்தக்குழம்பு உள்ளிட்ட உணவுகளைச் செய்து அந்த அரங்கத்தையே மணக்க வைத்தார்கள்.

விறுaவிறுப்பாக நடந்த போட்டியில் போட்டியாளர்கள் சமைத்து சூடாக இறக்கி வைத்த உணவுகளை செஃப் தீனா, சுவை பார்த்து, அதன் வடிவம், நேர்த்தி, அதன் பலன் குறித்து அனலைஸ் செய்து முதல் மூன்று இடங்களை பெற்று சென்னையில் நடக்கும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்ற பூங்கொடி, சசி, சுகன் யா ஆகியோரின் பெயர்களை அறிவித்தார். அவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கி போட்டியில் கலந்துகொண்ட 10 பேருக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எக்ஸோ, லலிதா ஜூவல்லரி, கோல்டு வின்னர், மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், அஸ்வின்ஸ், சௌபாக்யா, அபி டிவி, டெம்பிள் சிட்டி ஆகியோர் பங்களித்திருந்தார்கள்.