`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்…’ – கடும் உத்தரவை பிறப்பித்த இந்தூர் மாவட்ட நிர்வாகம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் இறங்கவிருக்கிறது. அதாவது, இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாசகம் செய்தால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படும் என இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

யாசகம்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், “இந்தூரில் யாசகம் எடுப்பதற்கெதிராக மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யாசகம் எடுப்பதற்கெதிரான எங்களின் பிரசாரமும் இம்மாதம் இறுதிவரையில் நடைபெறும்.

அதோடு, வரும் ஜனவரி 1 முதல் யாராவது யாசகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். யாசகம் செய்வதன் மூலம் பாவத்தில் பங்கெடுக்க வேண்டாம் என இந்தூரில் வசிப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அது அவர்களை அப்படியே பழக்கப்படுத்தும். மக்களை யாசகம் எடுக்கவைக்கும் பல்வேறு கும்பலை மாவட்ட நிர்வாகம் சமீப காலங்களில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்தார்.

எஃப்.ஐ.ஆர்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், யாசகர்கள் இல்லாத நகரங்களை உருவாக்கும் ஒரு முன்னோடி திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகரங்களில் இந்தூர் நகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PesalamVaanga