‘முதலமைச்சர் எந்த உலகத்தில் வாழ்கிறார் என தெரியவில்லை’ – வானதி சீனிவாசன்

Vvvபாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்கள் பிரச்னைகளை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்ற சட்டசபை கூட்டத்தொடர் நாள்களை குறைத்தது ஏமாற்றமளிக்கிறது.

வானதி சீனிவாசன்

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 100 நாள்கள் சட்டசபை நடத்துவோம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கின்றன. திமுக அரசு பல்வேறு துறைகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய அரசை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

 அமைச்சர்கள் செல்லும்போது மக்கள் வெளிப்படுத்தும் கோபம் வெறும் 5% மட்டுமே. இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.முதலமைச்சரும், அமைச்சர்களும் இதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. இந்த அரசு மக்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதற்கு தயாராக இல்லை.

கோவை

 சாலைகள் சரியில்லை. அதற்கென்று கொடுக்கின்ற நிதி எங்கு செல்கிறது. நிதி ஒதுக்கீடு என்று சொன்னாலும் வேலைகள் எதுவும் நடப்பதில்லை. வாகன பெருக்கம் அதிகரிக்கும் கோவையில் நவீன வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். ஆனால் அரசிடம் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை.

முதலமைச்சரும், அமைச்சர்களும் எந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என தெரியவில்லை. பல அமைச்சர்கள் மகாராஜா மனப்பான்மையில் இருக்கிறார்கள். நீர் நிலை ஆக்கிரமிப்பு நீக்கப்படாததால் மழை காலங்களில் அதற்கு அதிகமான கோடிகளை மக்கள் வரிப் பணத்தில் செலவிட வேண்டி உள்ளது.

Gautam Adani – கெளதம் அதானி

அதானியை நான் சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுகிறார். இது மாப்பிள்ளையின் அரசாங்கம் என திமுகவினர் சொல்கின்றனர். எங்கள் மாநில தலைவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள். 2026 தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் சொல்வார்கள்.” என்றார்.