இந்திய அரசு FPO(விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு)-களின் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை மேம்படுத்தவும் தீவிரமாக ஊக்குவித்துவருகிறது.
விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்பது
* விவசாயிகளின் பேரம் பேசும் திறனை மேம்படுத்துதல்,
* அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைத்தல்,
* சந்தை அணுகலை மேம்படுத்துதல்,
* கடன், தொழில்நுட்பம் மற்றும் பிற உள்ளீடுகளுக்கான அணுகலை வழங்குதல்,
* நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல்,
* பொருட்களை வாங்கி விற்கவும் நிதியுதவி அளிப்பதும் ஆகும்
இந்தியாவில் எஃப்பிஓக்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. மாநில அரசு FPOகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தியும் வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-13/lgzxieqn/IMG-20241211-WA0055.jpg)
* தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 1997: இந்தச் சட்டம் எஃப்.பி.ஓக்களை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் உகந்த சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.
* தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் சந்தைக் குழு (APMC) சட்டம், 2007: பாரம்பரிய APMC சந்தைகளைத் தவிர்த்து, தங்கள் விளைபொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்த இந்தச் சட்டம் FPOகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள FPOக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள்
* இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மொத்த FPOக்களின் எண்ணிக்கை: 10000+க்கும் மேல் (சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி)
2013ஆம் ஏப்ரல் 13ம் தேதி உழவர் மன்றங்கள் ஒன்றை நாமக்கல் மாவட்ட கேவிகே மையம் ஆரம்பித்தது. அப்போதே ஆரைக்கல் உழவர் மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஆரைக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
அதன்பின் பங்குதாரர்களில் சிலர் வெளியேற, மீண்டும் மறு கட்டமைக்கப்பட்டு, 2019-ல் 5 பேரை இயக்குநராக கொண்டு 1000 விவசாயிகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஆரைக்கல் உழவர் உற்பத்தியார் நிறுவனம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-13/oy533lak/IMG-20241211-WA0058.jpg)
நம் மாநிலத்தின் முதல் சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் நிறுவனமே இந்த ஆரைக்கல்தான். இந்நிறுவனத்தில் 50% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது 6 மாவட்டம், 1350 கடைகள், 6 டிஸ்ரிபியுட்டர்களுடன் செயல்பட்டு வரும் ஆரைக்கல் நிறுவனத்தில் 25 பேர் நேரடியாக பணியாற்றுகின்றனர். இதில் 50%பெண்களே. இந்த விவசாய உற்பத்தியாளர் அமைப்பு தங்களது இலக்குகளை வருடந்தோறும் நிர்ணயித்து அதன் இலக்கை அடைய முயற்சி செய்கிறது
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-13/rc0wexhs/IMG-20241211-WA0057.jpg)
அது மட்டுமல்லாமல் சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டுதல், விற்பனை, விதை முதல் விற்பனையை ஊக்குவித்தல், பயிற்சி அளித்தல் போன்ற பல பரிவுகளில் செயல்பட்டுவருகிறது. அது மட்டுமல்ல பி2பி , பி2சி, இணைய வழி வர்த்தகத்திலும் செயல்படுட்டு தங்களது வி்ற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதன் வழியே 65 வகையான உணவுப்பொருட்கள், சிறுதானிய உணவுகள், முளைக்கட்டிய தானியப்பொடிகள், நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்கள் உருவாக்கி விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனத்திற்கு சம்முனாட்டி போன்ற நிறுவனம் ஆரைக்கல் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்கள் இல்லாத சம்முனாட்டி நிறுவனம் விவசாய உற்பத்தியாளர்களுக்கு குறைவான வட்டியில் நிதிஉதவி அளித்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் வளர உதவி செய்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆரைக்கல் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் முளைக்கட்டிய தானியங்களில் ஹெல்த் மிக்ஸ், கம்பு லட்டு, மில்லெட் நுடுல்ஸ் நல்ல சந்தையைப் பெற்றுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி, இயந்திரக் கண்காட்சி, பயிற்சி போன்றவற்றையும் நாட்டு விதைகளையும் கொடுத்து விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
FPOக்களின் ஆரம்பிக்கப்பட்ட இலக்கே விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் திறனை வழங்குதல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைத்தல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், தேவையான கடன், தொழில்நுட்பம் மற்றும் பிற உள்ளீடுகளுக்கான அணுகலை வழங்குதல், விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகும். அவற்றினை ஆரைக்கல் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக செயல்படுத்திவருகிறது
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-13/20qz3mmh/IMG-20241211-WA0056.jpg)
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சிறந்த வழிகாட்டுதல், நிதி உதவி, விற்பனைக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் FPOக்களுக்கு உள்ளது. இருப்பினும், இந்த திறனை உணர, FPOக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. போதுமான ஆதரவை வழங்குவதன் மூலமும், சாதகமான கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலமும், FPOக்கள் வளர்ச்சியடையவும், விவசாயத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கவும் அரசாங்கம் உதவ முடியும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-13/6jx46bhi/IMG-20241211-WA0059.jpg)
ஒரு FPO வெற்றிபெற்றால் 1000 விவசாயிகளும், 1350 கடைகளில் பொருட்களை விற்கும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்கும் என்கிற போது, இந்தியா முழுதும் உள்ள 10000 FPO சிறப்பாகச் செயல்பட்டால் 1 கோடி விவசாயிகளுக்கும் சில லட்சம் கடைகளுக்கு விற்பனை வாய்ப்பும் கிடைக்கும், நமது மக்கள் தரமான பொருட்களை கொண்டு செயல்படுத்திடவும் முடியும்!
தொடரும்..!