VCK: “6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமா அணி மாறுவாரா?” – தமிழிசை கேள்வி

விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற பெயரில் அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய தொகுப்பு நூலை வெளியிட்டன. அந்த நூலில் வெளியீட்டு விழாவில், த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் பேசிய வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 9) வி.சி.க-விலிருந்து ஆறு மாத காலத்துக்கு ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார்.

திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவும் விளக்கமளித்து அறிக்கை ஒன்றைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு… ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..? இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras