‘StartUp’ சாகசம் 1: `PMEGP’ கடனை பயன்படுத்தி வந்த வாய்ப்பு… காகித மறுசுழற்சியில் `பேப்பர் எக்ஸ்’

தொடரின் நோக்கம்:

1. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல்

2. அவர்களின் பொருட்கள், தயாரிப்புகள், சேவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துதல்

3. இவர்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் ஊக்கம் வந்து புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குதல்

4. சிறு தொழில் முனைவோர்களின் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்குதல்

இந்த தொடர் தமிழக தொழில் முனைவோர் சூழலை மேம்படுத்த உதவும் ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும்.!

உலகில் ஒவ்வொரு 2.5 விநாடிக்கும் ஒரு மரம் வெட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 24 மரங்களும், ஒரு நாளைக்கு 4 கோடி மரங்களும், ஒரு மாதத்திற்கு 50 கோடி மரங்களும் , வருடத்திற்கு 700 கோடி மரங்கள் காகிதப்பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் மரம் நடுதலோ அதைவிட மிகக்குறைவான விகிதமே இருக்கிறது. இதனால் உலகம் முழுக்கவே அதிக மழை, அதிக வெப்பம் என்று பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் உலக அளவில்  மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களின் தேவை விகிதம் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மரங்களை வெட்டுதல்

மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதச் சந்தை 2021ல் US$ 32,558.44 மில்லியனிலிருந்து 2028ல் US$ 42,395.79 மில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது 2021 முதல் 2028 வரை 3.8% வருடாந்திர வளச்சியாக இருக்கும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காகிதங்களின் கழிவுகளை மறுசுழற்சியாக்கி அதை மறுபயன்பாட்டுக்கு  கொண்டு வர பல்வேறு நாடுகளின்  முயற்சிகள் காரணமாக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 30 கோடி வீடுகளில் நாள்தோறும் கிடைக்கும் காகித கழிவுகள் குப்பைகளிலும், குப்பை மலைகளிலும் கொட்டப்பட்டுவருகிறது. இதனால் ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் மக்கள் வசிக்கும் இடங்கள் குப்பைகளுக்கான இடமாக மாறிவருகிறது.

இந்தக் கழிவுகளை குப்பையில் கொட்டுவதை விட அல்லது எரிப்பதை விட மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை அமல்படுத்தி, மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் தொடர்பான புதிய சங்கங்களை உருவாக்குவதன் மூலம், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்திற்கான சந்தை வரும் ஆண்டுகளில் வேகமாக விரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ்

“இ-காமர்ஸ் காரணமாக இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தேவை மிகவும் அதிகரிக்கும். இதனால் இன்னமும் காகித அட்டைகள் குப்பையாகும் காலம் விரைவில் நாம் பார்க்க முடியும்.

2025 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் 30 கோடி மக்கள் மின்வணிகத்தை பரிவர்த்தனை ஈடுபடுவார்கள். அவ்வாறு ஈடுபடும்போது  அதை பேக்கேஜிங் செய்ய அதிகப்படியான காகிதத்தேவை அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது. சுமார் 750 இந்திய காகித ஆலைகளின் திறன் 14 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 20 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் காகித மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தை உங்களிடையே அறிமுகப்படுத்துவதில் மகிழ்ழ்ச்சி அடைகிறேன்.

சர்வோதீப் –  SARWODEEP  St. Anne’s Rural Women Development Education and Empowerment Programme என்பதன் சுருக்கும்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லுரியில் ஓர் அங்கமாக 1995ல் நிறுவப்பட்டு இன்றுவரை பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்துவருகின்றனர். இவர்களின் ஒரு பிரிவாகத்தான் பேப்பர்எக்ஸ் Paper X என்ற ஒரு அமைப்பு பயன்படுத்தப்பட்ட காகிதங்களைக் கொண்டு  ஒரு நாளைக்கு 200 கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட காகித அட்டைகளை உருவாக்கி அதைக்கொண்டு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு அட்டை, சிறு உண்டியல், அலுவலக கோப்பு, புதிய துணிகளை  பேக்கேஜ் செய்ய உதவும் அட்டைப்பெட்டி,  வீட்டு அலங்காரப் பொருள்கள், பரிசுப்பொருள்கள், பள்ளி , கல்லூரி & அலுவலகங்ளுக்கு தேவையான பைல்கள் என பலதரப்பட்ட பொருட்களை உருவாக்கிவருகின்றனர்.

இவர்கள் நாள்தோறும்  வீணாகும் காகிதப்பொருட்களை அரைத்து காகித  கூழாக்கி, அதிலிருந்து அட்டையாக உருவாக்கி அவற்றிலிருந்து பல வகையானப் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்கிவருகின்றனர். அதோடு மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற சிறிய நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது. அதுவும் குறிப்பாக மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களை மிக அதிகமாக இந்தியாவில் தேவையிருக்கிறது

எப்படி இந்த எண்ணம் தோன்றியது என்பது குறித்து சர்வோதீப் அமைப்பை நிர்வகித்து வரும் சகாய சங்கீதா அவர்களிடம் கேட்டோம், “பெரிய குளம் பகுதியில் மட்டும் வாரம் ஒரு முறைசுமார் 10-20 டன் பேப்பர் கழிவுகள் குப்பையாக அனுப்பப்படுவதாக பலர் தெரிவித்தனர், குறிப்பாக பிரிண்டிங் பிரஸ்,  கட்டிங் வேஸ்ட் & கல்லூரி , பள்ளி மாணவர்கள்  பேப்பர் வேஸ்ட்..வீடுகளில் ,கடை அட்டை பெட்டி வேஸ்ட் என பல தரப்பிலும் பேப்பர் குப்பைகள் வீணாக போவதாக  தெரிந்தது. ஆகையால் இந்தத்திட்டத்தினை செயல்படுத்த நாங்கள் ஆர்வமாக முயற்சிகள் எடுத்தோம்.

எங்களின் இந்த முயற்சியை எங்கள் மாவட்ட தொழில் மையத்திடம் அணுகியபோது அவர்கள் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (PMEGP)
கீழ் நாங்கள் இந்த மறுசுழற்சி உற்பத்திக்கான இயந்திரங்களை வாங்க கடன் உதவி கொடுத்தனர். இதனால் எங்களின் இந்த திட்டம் நிறைவேறியது. பிரதம மந்திரியன் வேலை வாய்ப்பு உருவாக்கத்திட்டத்தின் முக்கியப் பயனே
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கவும்,  பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர்களுக்கும்,
வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் வழியே கருவிகளை கொண்டு நாங்கள் எங்கள் பேப்பர் எக்ஸ் மையத்தினை செயல்படுத்திவருகின்றோம்

இதனைத்தொடர்ந்து  நாங்கள் பலருக்கும் பயிற்சி அளித்து இந்த பேப்பர்எக்சில் ல் பல வகையான மறுசுழற்சிப்பொருட்களை உருவாக்கியுள்ளோம்.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டை, துணி கடைக்களுக்குத் தேவையான துணிகளுக்கான பெட்டி,  உண்டியல், நினைவுப்பரிசு வழங்கும் அட்டைகள் என 40க்கும் மேற்பட்ட  பொருட்களை உருவாக்கிவருகின்றோம். இதன் வழியே மாதம் குறைந்த பட்சம் 25 டன் காகிதக்கழிவுகளை மறு சுழற்சியாக்கி மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருகின்றோம் ” என்றார்

துணி உற்பத்தியாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், உள்கட்டமைப்பு அலங்கார வடிவமைப்பாளர்கள், பேக்கேஜ் வடிவமைப்பு செய்பவர்கள்  உட்பட அனைவரும் இவர்கள் தயாரிப்புகளை வாங்கினால் நிச்சயம் அனைவரும் பயனடைவர், குறிப்பாக இப்புவியும் மகிழ்ச்சி அடையும்.

காகிதங்களை மறுசுழற்சி செய்யும் இவர்களை  உலகிற்க்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இனி இவர்கள் மேம்பாடு உங்கள் கைகளில்.!

உங்களிடமும் தொழில் சார்ந்த திட்டங்கள் இருந்தால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்,  உங்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகுவது.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01