“அரசியல் நாடகத்தில் அண்ணன் திருமா அவர்களின் இரட்டை வேடம்” – ஆதவ் அர்ஜுனா உரை குறித்து தமிழிசை

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை, அவரின் நினைவு நாளின நேற்று விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்டது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது, “கொள்கைகளைப் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரைக்கும் மேடையில் ஏற்றவில்லை. 2026-க்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது.

ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தை கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.  ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கேட்டால் தவறு என்று சொல்கிறார்கள். எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம். வேங்கைவயல் பிரச்னை இன்றைக்கு வரைக்கும் தீர்க்க முடியாததாக இருக்கிறது. மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள்.” என்றார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தன் எக்ஸ் பக்கத்தில்,“அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்! இன்றைய அரசியல் நாடகத்தில் அண்ணன் திருமா அவர்களின் இரட்டை வேடம். ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்!

தமிழிசை சௌந்தரராஜன்

இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் தி.மு.க-வின் அரசாட்சியோடு… ஒரு வேடம்! தி.மு.க கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்! தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக… நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்.. என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா????” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras