மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் நேற்று கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், “என் பையனை காப்பாத்தணும்னு சொல்ல வரல. இண்டு, இடுக்கு, பள்ளி, கல்லூரி, சந்தை, மார்க்கெட் என தமிழ்நாடு முழுவதும் எப்படி போதைப்பொருள் இருக்கு?தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்குது? எப்படி கிடைக்குது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியே ஆகவேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் என்னுடைய மகனின் செல்போன் நம்பர் இருந்திருக்கிறது. உடனே அதை வைத்து கைது செய்துவிட்டார்கள்.
போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் 3 கோடி செலவில் ‘சரக்கு’ என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓடிடி-யில்கூட அந்த படத்தை வெளியிடவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? அந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை செய்கிறார்கள். பிறகு எப்படி போதையை ஒழிக்க முடியும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs