`விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு’ – விருதுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

டெல்லியில், கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், FICCI Turf 2024, 14-வது விளையாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

ஸ்டாலின் – உதயநிதி

இந்த நிலையில், மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அந்த விருதுடன், தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.