Sivakarthikeyan: “எல்லைத் தாண்டிய ஒரு படம்…” – மகாராஜா படக்குழுவை வாழ்த்திய சிவகர்த்திகேயன்!

2024-ம் ஆண்டு வெளியான சிறந்தப் படங்கள் பட்டியலில் முக்கிய இடம், இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்துக்கு உண்டு. திரையரங்கில் ரூ.100 கோடிக்கும் அதிமாக வசூலித்து பெரும் வெற்றிப்பெற்றப் படம், ஓ.டி.டி தளத்திலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே, அலிபாபா குழுமம் இந்தப் படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து, 40,000 திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் சீனாவில் அமீர் கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தப் படமும் சீன ரசிகர்களால் கொண்டாடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மகாராஜா

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன் எக்ஸ் பக்கத்தில், “மகாராஜா சீனாவில் பிரமாண்டமாக வெளியானது! இந்த சாதனையைப் பற்றி பெருமைப்படுவதோடு, அங்கும் இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கும் வாழ்த்துகள். மேலும் எல்லைத் தாண்டிய ஒரு படத்தை உருவாக்கியதற்காக சுதன் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal