அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஹாத்வே நிறுவனத் தலைவரும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபட் தன் சொத்துகளில் 1.2 பில்லியன் டாலர் சொத்துகளை தன் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார். வாழ்நாளுக்குள்ளும், வாழ்நாளுக்குப் பிறகும் 150 பில்லியன் டாலரை நன்கொடை வழங்க வேண்டும் என 2006-ம் ஆண்டு வாரன்ட் பஃபட் உறுதிமொழி எடுத்திருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறார். இதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தன் மனைவி மெலிண்டா உடன் இணைந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, தன்னிடம் உள்ள சொத்துகளில் இருந்து பெரும் பகுதியைத் நன்கொடையாக அந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.
அந்த அறக்கட்டளையின் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் ஏழ்மை ஒழிப்பு உட்பட பல்வேறு உதவிகளை உலகில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கி வருகிறார்.
வாரன் பஃபெட்க்கு ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் என்று மூன்று வாரிசுகள் உள்ளனர். அந்த மூன்று வாரிசுகளும் தங்களது தலைமையில் அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
இத்துடன் வாரன் பஃபெட்டும் மறைந்த மனைவி சூசன் தாம்சன் பெயரிலும் ஓர் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், வாரன் பஃபட், A பங்குகளான 1,600 பங்குகளை B பங்குகளாக மாற்றி, அதை நான்கு குடும்ப அறக்கட்டளைகளுக்கும் வழங்குவதற்கான மற்றொரு உயிலை எழுதியிருக்கிறார்.
மேலும், தனது மூன்று பிள்ளைகளும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் படிப்படியாக இந்த நன்கொடைகளை கொடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன் வாரன் பஃபெட் $60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதில் சுமார் $43 பில்லியன் டாலர் பில் – மெலிண்டா கேட்ஸ் நடத்தும் கேட்ஸ் அறக்கட்டளைக்கு மட்டுமே வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…