இன்க்லிங்க் அறக்கட்டளை மற்றும் HLC இன்டர்நேஷனல் ஸ்கூல், தாலம்பூர் இணைந்து நடத்திய ஆர்ட் அட் ஹார்ட் முன்முயற்சி.
மாணவர்களின் படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் ஒத்துணர்வு திறனை வளர்க்கும் முயற்சியில் நிப்பான் பெயிண்ட் பங்குதாரர்கள் உடன் இணைந்து இன்க்லிங்க் அறக்கட்டளை மற்றும் HLC இன்டர்நேஷனல் பள்ளி நடத்திய “ஆர்ட் அட் ஹார்ட்” நிகழ்வு நவம்பர் 16 and 17th, 2024 அன்று நடைபெற்றது. பல்வேறு பின்னணியை சேர்ந்த குழந்தைகளை இந்த நிகழ்வு ஒன்றிணைத்து, அவர்களுக்கு இடையே இருக்கும் சமூக-பொருளாதார ரீதியிலான இடைவெளி மற்றும் நலிவடைந்த பின்னணியை சேர்ந்த மாணவர் சமூகத்தின் மீது இருக்கும் தவறான கருத்துக்களுக்கு சவால் விடுவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
HLC இன்டர்நேஷனல் மாணவர்கள் மற்றும் கண்ணகிநகர் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கலை படைப்புக்களை கற்றுக்கொண்டு, உருவாக்கி, பகிர்ந்து கொண்டனர். இந்த அனுபவம் குழந்தைகளுக்கு மத்தியில் ஒற்றுமை வளர்த்தது. மாணவர்களின் கலைப்படைப்புகளை நிரந்தரமாக காட்சிப்படுத்தி, சமூக உணர்வைக் கொண்டாடுவதற்காக சுவர் ஒன்றை அர்பணித்துள்ளது HLC இன்டர்நேஷனல். பள்ளியின் சுவர் முழுக்க நிப்பான் பெயிண்ட்டின் வண்ணமயமான வண்ணங்களால் கலைத்திறனின் சாட்சியாக ஜொலிக்க உள்ளன.
நிப்பான் பெயிண்ட் இந்தியாவின் தலைவர் திரு. மகேஷ் எஸ்.ஆனந்த், இந்த கூட்டணி குறித்து பேசுகையில் ” குழந்தைகளின் சமூகம் சார்ந்த சுவர் ஓவியத்தை உருவாக்கும் இந்த தனித்துவமான முயற்சியில் இன்க்லிங்க் அறக்கட்டளையுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டணி மூலம் ஐ.நா.வின் வளர்ச்சி இலக்குகளான கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் உறுதிப்பாட்டுடன் நிப்பான் பெயிண்ட் ஒத்துப்போகிறது. இது எங்கள் CSR முன்முயற்சிகளில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி நாளைய சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்” என பேசி இருந்தார்.
இன்க்லிங்க் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான திருமதி. ஷஸ்வதி சென்குப்தா பேசுகையில் “எங்களின் இந்த வருடாந்திர செயலான தனித்துவமான சமூகக் கலை முயற்சியின் மூலம் மாணவர்களின் கலைத்திறன் வெளிப்படுவதுடன், கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பில் உள்ள வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியைத் தொடர உதவியாக அவர்களின் பள்ளி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் UNSDG களைப் பின்பற்றுகிறது. அதன் மூலம் கல்வி, சுற்றுச்சூழல், சமூக மேம்பாடு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த ஒரு உலகத்தை உருவாக்க ஒத்துழைக்கிறோம்” என்றார்.
HLC அறங்காவலர்களான திருமதி ராஜி & திரு. நவீன் பேசுகையில் “ஆர்ட் அட் ஹார்ட் என்பது கலை மற்றும் சமூக உள்ளடக்கத்தின் மூலம் குழந்தைகளை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும். இன்க்லிங்க் அறக்கட்டளை மற்றும் நிப்பான் பெயிண்ட் உடன் இணைந்து சமூகப் பிளவுகளைக் குறைத்து, இளம் மனங்களை ஒன்றிணைந்து, ஒத்துழைத்து வளர்க்க உதவுகிறது.
கல்வி என்பது கற்றல் மட்டுமல்ல, படைப்பாற்றலை பகிர்ந்து, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியை உருவாக்குவது. இந்த முன்முயற்சி HLC இன் பார்வையில் ஆர்வமுள்ள கற்றவர்களை கவனமுள்ள தலைவர்களாக வளர்க்கிறது” என்றார்.