தீவிர வலதுசாரி சிந்தனையாளரான முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்ப் , இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கிறார். அதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக வலுவாக பதவியை கைப்பற்றியிருக்கிறார். பிரசாரத்தின் போதே தனிமனித தாக்குதல்கள், பெண் வெறுப்புப் பேச்சுகள், இனவெறிக் கருத்துகள் என அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த நிலையில், The Sunday Times எனும் வார இதழில் ஒரு கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், “திருநங்கைகள் மருத்துவ ரீதியாக ராணுவத்தில் சேவையாற்ற தகுதியற்றவர்கள் எனக் குறிப்பிட்டு, அதனால் அமெரிக்க இராணுவத்திலிருந்து அனைத்து திருநங்கை ராணுவ வீரர்களையும் நீக்குவதற்காக டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருக்கிறார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவரின் முந்தைய அதிபர் பதவிகாலத்தில், ராணுவத்தில் திருநங்கைகளை இணைப்பதற்கு தடை விதித்திருந்தார். ஆனால், ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார். டொனால்ட் ட்ரம்புக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்ற ஜோ பைடன், அந்தத் தடையை நீக்கினார்.
இந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் சுமார் 1500 திருநங்கைகள் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அமெரிக்க இராணுவத்தின் பொறுப்பாளரும், டொலான்ட் ட்ரம்பின் பாதுகாப்புத் தேர்வாளருமான பீட் ஹெக்செத், The Washington Post நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ ராணுவம் முழுவதும் பெண்கள் மற்றும் திருநங்கைகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் அமெரிக்க பாதுகாப்பை சீர்குலைக்கும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…