Rain Red Alert: நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நவம்பர் 23-ம் தேதி உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Rain Riding

தெற்கு அந்த​மான் கடல் மற்றும் தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, பூமத்திய ரேகை​யையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்​கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதியில் காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாகைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தூரத்திலும் புதுவைக்கு 980 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. மேலும் வலுப்பெறும்போது தமிழகத்தில் மழைப்பொழிவு ஏற்படவிருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், ராமநாத​புரம் மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​ பெய்ய வாய்ப்புள்​ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

Rain

தமிழகத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படும் என்பதனால் தனியார் வானிலை ஆர்வலர்கள் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 26, 27) ஆகிய 2 நாள்கள் 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட KTCC பகுதிகளில் 28-ம் தேதி முதல் மழைப்பொழிவு ஏற்படும் எனக் கூறியிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook