Canada: `எங்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதை விட நம்பகத்தன்மையற்றவர்கள்…’ – ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே நேரம் கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், “கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். அது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி

இதற்கிடையில், Globe and Mail நாளிதழ் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும், கனடாவில் நடந்த வன்முறை சதித்திட்டங்களைப் பற்றியும் பிரதமர் மோடியும், இந்திய உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் ஆகியோர் அறிந்திருந்தார்கள் என நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “துரதிஷ்டவசமாக, குற்றவாளிகள் ஊடகங்களுக்கு உயர் ரகசியத் தகவல்களைக் கசியவிடுவதால், அது தொடர்பான தகவல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

அதனால்தான் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து நாங்கள் தேசிய விசாரணையை நடத்தினோம். அந்தத் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடும் எங்களின் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதைவிட அவர்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் என்பதையே இது போன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ, நரேந்திர மோடி

இதற்கு முன்னர், கனடாவின் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ட்ரூயின், அரசு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடா விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது என்.எஸ்.ஏ தொடர்பு இருப்பதாக கனடா அரசு கூறவில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் கனடா குறித்து வரும் தகவல்கள் ஊகமானவை, தவறானவை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal