“இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” – நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து

கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்துக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை காஸாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நடந்து வரும் போரில் மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் மீறுவதாகவும் எழுந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. அதன் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக விமர்சித்திருந்த நெதன்யாகு, “யூத வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நெதன்யாகு

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெதன்யாகு இங்கிலாந்து வந்தால், இங்கிலாந்து காவல்துறை அவரை கைது செய்யுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நெதன்யாகு பெயரைக் குறிப்பிடாமல், “உள்நாட்டுச் சட்டம் சர்வதேச சட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்ற வரையரை உள்ளது. அதன்படி இங்கிலாந்து சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்து சட்டம் சொல்வதென்ன?

சர்வதேச நீதிமன்றம் உருவாக்கிய சர்வதேச ஒப்பந்தமான ரோம் சட்டத்தில், பிரிட்டன் 1998-ல் கையெழுத்திட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டது. இங்கிலாந்தின் ஐசிசி சட்டம் 2001-ன் படி, ஒரு அரசின் தலைவர், அல்லது அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டால், அதற்குரிய ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தால், பொருத்தமான நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறார் என இங்கிலாந்து அரசு முடிவு செய்தால், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இதுவரை யாரும் இங்கிலாந்து செல்லாததால் இன்றுவரை அந்தச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MaperumSabaithanil