`மகாராஷ்டிரா வெற்றி பாரத தேசத்தின் கருத்து; 2026… எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’ – தமிழிசை உற்சாகம்

மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக முன்னிலையில் இருக்கிறது.

மகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ” இரண்டு மாநிலங்களில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதில் பலம் பொருந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மையோடு வெற்றி பெற இருக்கிறது என்ற மகிழ்ச்சியை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். மகாராஷ்டிரா என்பது மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்ட மாநிலம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் அங்கே வசிக்கிறார்கள், பணிப்புரிகிறார்கள்.

அதனால் சின்ன பாரத தேசம் என்று மகாராஷ்டிராவை சொல்லலாம். அதனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்கு கிடைத்திருக்கூடிய வெற்றி பாரதிய தேசம் முழுவதும் உள்ள கருத்து என எடுத்துக்கொள்ளலாம். இந்த வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.

தமிழிசை சௌந்தரராஜன்

அதுமட்டுமின்றி பாரத பிரதமரின் திட்டங்களும், மாநில அரசின் திட்டங்களும் இணைந்து இருந்தால் மக்களுக்கு எவ்வளவு பலன் தரும் என்பதை மகாராஷ்டிரா நிரூபித்து மறுபடியும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். தற்போது எப்படி மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாடுகிறோமோ… அதேபோல 2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை இதே கமலாலயத்தில் கொண்டாடுவோம் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY