மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பலர் தங்களது அதிர்ஷ்டத்தை நம்பி போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர். பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அஜாஸ் கான் மும்பையில் உள்ள வர்சோவா தொகுதியில் ஆஷாத் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ஆஷாத் நடத்தி வரும் கட்சி அஜாஸ் கானை இத்தேர்தலில் போட்டியிட வைத்தது.
தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், நோட்டாவுக்கு 1298 வாக்குகள் கிடைத்தது. ஆனால் இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பாலோவர்களை கொண்டிருக்கும் அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட ஹரூன் கான் 65 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பாரதி இத்தொகுதியில் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அஜாஸ் கான் இத்தேர்தலில் 155 வாக்குகள் பெற்று இருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். “அஜாஸ் கான் குடும்பத்தினரே அவருக்கு வாக்களித்தனரா என்று தெரியவில்லை” என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மற்றொருவர் “அஜாஸ் கானை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…