“திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்…” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தப் பகுதியின் மத்திய கள‌ ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “தமிழ்நாட்டில் தினம் தினம் கொலை என்பது இப்போது நொடிக்கு நொடி கொலை என்ற சூழலாக மாறிவிட்டது. வெளியே செல்லும் ஒருவர் தற்போது பத்திரமாக வீடு திரும்பும் நிலை இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு வாழ்வா… சாவா என்று அவநம்பிக்கையில் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு எப்போதும் பாசிட்டிவ் தான். 2026-ல் நாங்கள் தான் வெல்வோம்.

ஜெயக்குமார்

திமுகவிற்கு ராசி கிடையாது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. எங்களின் தலைவர் மூன்று முறை ஆட்சிக்கு வந்தார். அம்மா இரண்டு முறை ஆட்சியை பிடித்தார்.

2021-ல் தோல்வி அடைந்திருந்தாலும், 2026-ல் மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். 13 வருட வனவாசம் மாதிரி இனி நிரந்தர வனவாசம் திமுகவிற்கு தான்” என்று பேசினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook