நேற்று (நவம்பர் 20) இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸிடம், அவரது இரண்டாவது மகன் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிரெஞ்சு மொழி பயில்வதாகப் பேசிய வீடியோ வைரல் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “எனது மகன் 6 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைத்தான் படித்தார். 7ஆம் வகுப்பில் புதிதாக ஒரு மொழியைக் கற்க முயற்சி செய்வதாகப் பிரெஞ்சு மொழியைத் தேர்வு செய்து படித்தார்.
அது கடினமாக இருப்பதாகத் தற்போது தமிழ் மொழிக்கு மாறிவிட்டார். சத்யா மேடம் தான் அவரது ஆசிரியர். எதனால் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. திடீரென மைக் நீட்டிக் கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் சொல்லிவிட்டான். கவலையே படாதீர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகன் தமிழ் மொழியில்தான் படிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்துத்தான் வருகிறோம்.
மாநில கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தித் தான் வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
மாநில கல்விக் கொள்கை எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, “ஒட்டு மொத்தமாகக் கருத்து வாங்கியிருக்கிறோம். அது சார்ந்தே பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது.
அதனை வரக் கூடாது என்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறார்கள். அதனை ஏற்காமல் செயல்படுத்தி வருவது நம் மாநில கல்விக் கொள்கை சார்ந்ததே” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs