America: ட்ரம்பிடம் பேசிய சுந்தர் பிச்சை; இணைப்பில் இருந்த எலான் மஸ்க் – தொடரும் நட்பு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

ட்ரம்பின் வெற்றி உரையின்போது கூட, “ எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்பிடம் பேசினார். அந்த அழைப்பில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்-கும் இருந்ததாக தகவல் வெளியானது.

எலான் மஸ்க், ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் முக்கிய உரையாடல்களின் போதும் மஸ்க் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு சமபவம் நடந்திருக்கிறது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அதிபராக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த உரையாடலின் போது டெஸ்லா நிறுவனர் மஸ்க்கும் இணைந்ததாக ‘தி இன்ஃபர்மேஷன்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

‘அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்ட் ட்ரம்ப் பற்றி தேடினால் கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள்தான் அதிகம் வருகிறது’ என கூகுள் மீது எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தச் செய்தி தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook