திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்கள்.
இதுகுறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்ட போது, “எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மனிதம் என்ற அமைப்பின் மூலம் எல்லா வாரமும் ஞாயிற்றுகிழமை ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றனர். கல்லூரியில் படிக்கும் அக்கா, அண்ணன் எல்லாரும் ஒவ்வொரு வாரமும் இதைச் செய்கிறார்கள்.





அதை அறிந்ததும், எங்களுக்கும் அப்படி சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது குறித்து, எங்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்ட போது மறுக்காமல் எங்களுக்கு உதவி செய்தனர். குழந்தைகள் தினம் அன்று எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். இன்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மனிதம் அமைப்பின் ஒருங்கிணைப்பால் உடன் சென்று உணவுகளை வழங்கினோம். இதுவரை நாங்கள் கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் இதுவே மறக்க முடியாத மகிழ்ச்சியை கொடுத்து. எங்கள் இந்த எண்ணத்தை நிறைவேற்ற உதவிய எங்கள் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி” என்றனர்.
பள்ளி மாணவர்கள் வழங்கிய உணவை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த செயல் பொது மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.