கிண்டி: `மருத்துவரே இல்லை’ – உயிரிழந்த இளைஞர்; கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் உறவினர்கள் கதறல்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும் திமுக அரசை விமர்சித்து இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்தவரின் உறவினர்கள்

இந்நிலையில் மீண்டும் அதே கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் வயிற்று வலியால் சேர்க்கப்பட்ட விக்னேஷ் என்ற நபர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் இரண்டு நாட்களாக அனுமதித்து இருந்தும் எந்த ஒரு சிகிக்சையும் கொடுக்கவில்லை என்றும், மருத்துவர்கள் விக்னேஷை வந்து பரிசோதிக்கவில்லை, மருத்துவர்கள் போராட்டம் காரணமாக விக்னேஷை பரிசோதிக்கவில்லை, இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும், அதனால்தான் விக்னேஷ் உயிரிழந்து விட்டார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal