Coimbatore Vizha: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணித்த டபுள் டக்கர் பேருந்து; கோவை விழாவில் களமிறக்கம்

கோயம்புத்தூரைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘கோவை விழா’ நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கோவை விழா தொடங்கியது. வருகிற டிசம்பர் 1ஆம் தேதி வரை கோவை விழா நடைபெறவுள்ளது. கோவை விழாவில் டபுள் டக்கர் பேருந்து முக்கியப் பகுதியாக இருக்கும்.

டபுள் டக்கர் பேருந்து இதுவரை மூன்று முறை இயக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நான்காவது முறையாக இந்தாண்டும் டபுள் டக்கர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை டபுள் டக்கர் பேருந்து
கோவை டபுள் டக்கர் பேருந்து
கோவை டபுள் டக்கர் பேருந்து

இதற்கான தொடக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்தாகும். டி20 உலக கோப்பை வெற்றி பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தப் பேருந்தில்தான் பயணம் செய்தனர்.

வ.உ.சி பூங்காவிலிருந்து கிராஸ் கட் ரோடு, நூறு அடி சாலை, கொடிசியா, விமான நிலையம், துடியலூர், திருச்சி சாலை மேம்பாலம், வாலாங்குளம் எனப் பல்வேறு இடங்களில் இந்த டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படும். இதில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

இதற்கான இலவச டிக்கெட்டுகளை coimbatorevizha.theticket9.com  என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb