கோவை பேராசிரியரின் பாலியல் அத்துமீறல்… தோழிக்கு லொக்கேஷன் அனுப்பி, சமயோசிதமாக தப்பித்த இளம்பெண்!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிறிது காலத்தில் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும் பணியில் இணைந்தபோது  அந்த நிறுவனத்தில் அந்தப் பெண் தன் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.

கோவை பாலியல் வழக்கில் கைதான சிவப்பிரகாசம்

பணியில் இருந்து விலகிய பிறகும் அவர்கள், இளம் பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பலமுறை முயற்சித்தும் அந்த நிறுவனம் சான்றிதழை கொடுக்கவில்லை.

இதையடுத்து அந்தப் பெண், கோவை கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள தன் பேராசிரியர் சிவப்பிரகாசம் (45) என்பவரின் உதவியை நாடியுள்ளார். அந்த நிறுவனத்திடம் இருந்து தனது சான்றிதழை வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சிவப்பிரகாசம், “நான் சான்றிதழை வாங்கிவிட்டேன். வேறு ஒரு நிறுவனத்தில் உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்.” என்று சொல்லி தன் வீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி அந்த இளம்பெண் நேற்று சிவப்பிரகாசம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் சிவப்பிரகாசம் மட்டுமே இருந்துள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிய சிவப்பிரகாசம்,  திடீரென இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் இளம்பெண், சிவப்பிரகாசத்திடமிருந்து தப்பி வீட்டின் குளியலறைக்குள் புகுந்தார்.

பாலியல் தொல்லை

உடனடியாக  செல்போனில் தன் தோழியை தொடர்புகொண்டு, விவரத்தை சொல்லி கரன்ட் லொகேசனை அனுப்பியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட தோழி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த லொக்கேஷனுடன் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக காவல்துறை அங்குச் சென்று இளம்பெண்ணை மீட்டு, சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb