வரவிருக்கும் திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணித்துள்ளது அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (CAIT).
நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை 35 நாள்களுக்குள் திருமணங்களால் மட்டும் 6 லட்சம் கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே சீசனில் 35 லட்சம் திருமணங்கள் நடைபெற்று, 4.25 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்த 35 நாள் சீசனில் 11 முக்கிய திருமண தினங்கள் இருந்தன. இந்த ஆண்டில் 18 தினங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் மூலமாக 1.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என கணித்திருக்கின்றனர்.
CAIT-ன் வேத மற்றும் ஆன்மீகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆச்சார்யா துர்கேஷ் தாரே 18 முக்கிய தினங்களைக் கூறியுள்ளார். நவம்பர் மாதத்தில் 12,13,17,18,22,23,25,26,28 தேதிகளும் டிசம்பரில் 4,5,9,10,11,14,15,16 தினங்களும் முக்கிய தினங்களாகக் கூறப்பட்டுள்ளன.
இந்த தினங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனவரி மாத பாதியில் இருந்து மார்ச் வரை திருமணங்கள் நடைபெறும்.
மக்களின் பொருளாதார நிலை அடிப்படையிலேயே திருமணங்களுக்கான செலவீனம் அமைகிறது. அந்தவகையில் எத்தனைத் திருமணங்கள் என்னென்ன பொருள்செலவில் செய்யப்படுகின்றன என்பதையும் கூறியுள்ளது CAIT.
-
3 லட்சம் பொருட்செலவில் 10 லட்சம் திருமணங்கள்,
-
6 லட்சம் பொருட்செலவில் 10 லட்சம் திருமணங்கள்,
-
10 லட்சம் பொருட்செலவில் 10 லட்சம் திருமணங்கள்,
-
15 லட்சம் பொருட்செலவில் 10 லட்சம் திருமணங்கள்,
-
25 லட்சம் பொருட்செலவில் 7 லட்சம் திருமணங்கள்,
-
50 லட்சம் பொருட்செலவில் 50 ஆயிரம் திருமணங்கள்,
-
1 கோடி பொருட்செலவில் 50 ஆயிரம் திருமணங்கள்
நடைபெறலாம் என்று கூறியுள்ளனர்.
திருமண செலவுகளை பொருள் செலவு மற்றும் சேவை கட்டணங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
இந்த திருமணங்கள் மூலம் ஆடைகள் (சேலைகள், லெஹங்காக்கள்), நகைகள், எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், பழங்கள், காய்கறிகள், மளிகை சாமான்கள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
திருமண அரங்கங்கள், ஹோட்டல்கள், ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பந்தல் அமைப்பு, கேட்டரிங், மலர் அலங்காரங்கள், போக்குவரத்து வாகனங்கள், புகைப்படம் மற்றும் வீடியோகிராபி, இசைக் குழுக்கள், ஒலி, ஒளி வேலைப்பாடுகள் மற்றும் பிற சேவைகளுக்கு அதிகம் செலவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb