ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ‘Iconic Brand of India 2024″ என்ற விருதை பெற்று ஜொலிக்கிறது.
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தூய்மை, நம்பிக்கை. மற்றும் தனிச்சிறப்பிற்கு இணையான பெயராக விளங்கி வருகிறது. சமீபத்தில் எகனாமிக் டைம்ஸின் முன்முயற்சியான ஈடி எட்ஜ் மூலம் Iconic Brands of India 2024 என்ற விருதால் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளது. ET Edge-ன் 7வது பதிப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இவ்விருதை வென்றுள்ளது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம் நகைத் துறையில் அதன் தலைமை மற்றும் சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த மதிப்புமிக்க பாராட்டு கிடைத்துள்ளது. இவ்விருது ஜிஆர்டியின் ஆறு தசாப்த பயணத்தில், அபூர்வமான நகைகளை வடிவமைக்கும் அதன் மேலோங்கிய ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என தன்னிகரில்லா நகை வடிவமைப்பில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் உள்ள குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் உறுதியளிப்பானது தவிர்க்க முடியாத கைவினைத்திறன், தொடர்ச்சியான புதுமைகள் மற்றும் விட்டுக்கொடுக்காத தரம் என தனித்து இருப்பதால் அது ஒரு விஸ்வாசமான வாடிக்கையாளர்கள் அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. Iconic Brands of india 2024′ விருது -ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நம்பிக்கை, தரம் மற்றும் புதுமையின் அடையாளமாக திகழ்கின்ற நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது, மேலும் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அதன் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த அங்கீகாரத்தைப் பற்றி, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு ஜி.ஆர். ‘ஆனந்த் ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது. கடவுளின் அருளால், இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவதில் நாங்கள் மிகவும் தாழ்மையும் பெருமையும் அடைகிறோம். தொடர்ச்சியான பதுமைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த சாதனை, எங்கள் ஒட்டுமொத்த குழுமத்தின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கும் மற்றும் எங்கள் மதிப்புமிகு வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குமான சான்றாகும் இது பதுமையும் சிறந்து விளங்குவதற்கான எங்கள் தேடலையும் மேலும் முன்னேற ஊக்குவிக்கிறது என்று தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், ‘இந்த விருது எங்கள் நீண்ட கால பயணத்திற்கு ஒரு சான்றாகும் இவ்விருது தரம் மற்றும் வாடிக்கையாளரை திருபதிபடுத்தும் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது எங்களின் முயற்சிகளை அங்கீகரித்து இந்தப் பெருமைப்படைத்த பாராட்டை வழங்கிய நடுவர் குழுவிற்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கூறினார்