“’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ முன்னெடுப்பை நோக்கி செல்கிறோம்..!” – பிரதமர் மோடி

நேற்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 149-வது பிறந்த நாள். இதையொட்டி நேற்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார். அதில், “நாடுகள் தனித்தனியே பிரிந்து வளர்ந்து வருகின்றது. ஆனால், அவர்களை இந்தியாவை நோக்கி நெருங்குகின்றனர். இது சாதாரண விஷயம் அல்ல…புதிய சரித்திரம் இப்போது எழுதப்படுகிறது. இந்தியா பிரச்னைகளை எப்படி கையாள்கிறது என்று உலகமே உற்று நோக்குகிறது. அதனால், நாம் நமது ஒற்றுமை பேணி காக்க வேண்டும்.

புதிய சரித்திரம் இப்போது எழுதப்படுகிறது…

ஆனால், இந்தியாவின் உள்ளேயும், வெளியேயும் சிலர் இந்த வளர்ச்சியால் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் இந்தியாவினுள் பிரச்னைகளை உருவாக்க முயலுகின்றனர். மேலும் அவர்களுக்கு இந்தியாவை பற்றி உலக முதலீட்டாளர்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்று சேர வேண்டும். இவர்கள் சாதி பெயரில் மக்களை பிரிக்க நினைக்கின்றனர். இதன் மூலம் இந்திய சமூதாயம் மற்றும் ஒற்றுமையை கெடுக்க நினைக்கின்றனர்.

அவர்களுக்கு இந்தியா முன்னேறக் கூடாது. ஏனெனில், அவர்களுக்கு ‘ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா’ அரசியல் தான் சரிப்பட்டு வரும். அதனால், அவர்கள் அரசியலமைப்பு என்ற பெயரில் இந்தியாவை உடைக்கின்றனர். இந்த நக்சல் கூட்டணியை கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று மோடி கடுமையாக சாடியிருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்திய அரசியலமைப்பை வைத்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், “இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’, ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ ஆகிய முன்னெடுப்பை நோக்கி செல்கிறோம். இது வளர்ந்த இந்தியா கனவுக்கு மிகவும் உதவும்.

‘ஒரு நாடு, ஒரு அடையாளம்’

‘ஒரு நாடு, ஒரு அடையாளம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார், ஜி.எஸ்.டி போன்றவை மிகவும் வெற்றிகரமானவை.

ஜம்மு காஷ்மீரின் 370 பிரிவு நமது அரசியலமைப்பை அங்கு செயல்படுத்த முடியாதப்படி சுவராக இருந்தது. அது திரும்பப்பெற்ற பிறகு, முதல்முறையாக அங்கு எந்தவித பாகுபாடுமின்றி தேர்தல் நடந்தது. முக்கியமாக, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதவி பிராமணத்தை ஏற்றுக்கொண்டார்” என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs