“திமுக கூட்டணிக்குள் புகைச்சல்” – எடப்பாடி பழனிசாமி கூறுவது எத்தகையது? | விகடன் கருத்துக்கணிப்பு

வி.சி.க-வின் அதிகாரப் பகிர்வு குரல் எழுந்தபோதும், மது ஒழிப்பு மாநாடு சமயத்திலும், தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகப் பரவலாகப் பேச்சுகள் அடிபட்டன. பின்னர், வி.சி.க தலைவர் திருமாவளவனே, `தி.மு.க கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது’ என்று விளக்கமளித்தார்.

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

அதையடுத்து, உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டபோது, தி.மு.க-வில் மூத்த அமைச்சர்கள் வேறு யாருமே இல்லையா எனவும் வெளியிலிருந்து கேள்விகள் வந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்குள் இத்தகைய சம்பவங்கள் நிலவிக் கொண்டிருந்த வேளையில், `தி.மு.க கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது’ என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய கருத்து தொடர்பாக விகடன் வலைத்தளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், `தி.மு.க கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து?’ என்று கேள்வி கேட்கப்பட்டு, `சரியானதே, தவறானது, கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவில், `அதிகபட்சமாக 54 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து சரியானதே’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 39 சதவிகிதம் பேர் தவறானது என்றும், 7 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி முடித்திருக்கும் நிலையில், மாநாட்டில் எந்தக் கட்சியை அவர் எதிரியாக நிலைநிறுத்தி அதிகம் தாக்கிப் பேசியதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என விகடன் வலைத்தளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில், கலந்துகொள்ளப் பின்வரும் லின்கை க்ளிக் செய்யவும்…

https://www.vikatan.com/

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk