இன்று அல்லது நாளை இந்திய – சீனா எல்லையில் கட்டுபாட்டு கோட்டிலிருந்து, இரு நாட்டு ராணுவ வீரர்களையும் திரும்ப பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய – சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதிலிருந்து அந்த எல்லையில் இரு நாடுகளும் ராணுவ வீரர்களை குவித்து வந்தனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், ஒருவழியாக கடந்த வாரம் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் பிரச்னை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிங் பிங் சந்தித்து பேசிக்கொண்டனர்.
இந்த நிலையில், இருநாடுகளும் இன்று அல்லது நாளையோ டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதியில் தங்களது ராணுவத்தினரை திரும்ப பெற உள்ளனர். இந்த இடத்தை தவிர பிற இடங்களில் வழங்கம்போல ராணுவ வீரர்கள் தங்களது பணியில் ஈடுபடுவார்கள். திரும்ப பெறப்படும் வீரர்கள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எந்த இடத்தில் பணியில் இருந்தார்களோ, அதே இடங்களுக்கு திரும்புவார்கள்.
இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்த இடங்களில் ராணுவ வீரர்களை திரும்ப பெறும் இந்த நடவடிக்கை முதல் அடியே. அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளை களைய வேண்டும். இந்த இரு நாடுகளுக்கு இடையேயும் நம்பிக்கை உருவாக இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.