`தஞ்சையில் பிறந்த முதல்வர் மனுநீதி சோழன் போல் தன் மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா?’ – ஹெச்.ராஜா கேள்வி

`விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பு’ – ஹெச்.ராஜா

பா.ஜ.க கரூர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“இந்தியாவில் தேசியமும், தெய்வீகமும் நாட்டின் கலாசாரமாக உள்ளது. கலாசாரத்தை போற்றும் வகையில் நம் முன்னோர்களான மருது சகோதரர்கள் இருந்தனர். அவரின் நினைவு நாளில் அவர்களைப் போற்றுவது நம் கடமையாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில் விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் பா.ஜ.க பொதுக்குழுவை எதிர்த்து பா.ஜ.க நிர்வாகிகளை தாக்க வி.சி.க-வினர் முற்பட்டனர்.

ஹெச்.ராஜா

நேற்றைய தினம் கூட கரூரில் ஒரு செல்போன் கடையில், இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாக கூறி வி.சி.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. தனியார் செல்போன் விற்பனை நிலையத்தில் தீபாவளி வாழ்த்துகளை மும்மொழியில் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையில் முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை கூட வி.சி.க-வினர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் மது உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களை வைத்துக்கொண்டு மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினர். வி.சி.க ஒரு வன்முறை கும்பல். அந்த வன்முறை கும்பலை தி.மு.க அருகிலே வைத்திருப்பது ஒரு இழுக்கு.

சமீபத்தில் தமிழக ஆளுநர் கலந்து கொண்ட பொதிகை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது. .இதனை கண்டிக்க தமிழக முதல்வருக்கு உரிமை உண்டு. ஆனால், தமிழக ஆளுநர் மீது இனவாத விரோத போக்கு காட்டுவதாக கூறும் குற்றச்சாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் என தொடர்ந்து தி.மு.க விமர்சித்து வருகிறது. கடந்த 1944 – ம் வருடம் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க இந்திய தேசத்திற்கு எதிராக ஆங்கிலேயர்கள் வெளியேறக்கூடாது. லண்டனிலிருந்து ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆழலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிய தேச துரோகிகள் யார் என நாடறியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் என்று பல்வேறு தேசிய பேரிடர்களில் நேரடியாக களத்தில் இறங்கி, சேவை செய்கிறது.

ஹெச்.ராஜா

சமீபத்தில் கவரப்பேட்டை ரயில் விபத்தில் கூட எந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் காங்கிரஸ் சேவா தளத்தை சேர்ந்தவர்களும் கூட நேரடியாக மக்களை மீட்டு பணியாற்ற களத்துக்குச் செல்லவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ், சேவாதளம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் நேரடியாக சென்று மக்களுக்கு உதவி செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு சேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ளாமல் பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தேசத்திற்கு விரோதமாக செயல்பட்டவர்களை அரசியலில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

`துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா’ – ஹெச்.ராஜா

தமிழக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வார்த்தை விடுபட்டதை பெரிதாக்கிய தி.மு.க, தற்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வார்த்தை விடுபட்டதாக கூறி தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா என்று கேட்கிறேன்.

உதயநிதியைப் போல ஒரு தரம் கெட்ட அரசியல்வாதி தமிழகத்தில் யாரும் இல்லை. ‘நானும் தஞ்சாவூரில் பிறந்தவன்தான்’ என்று சொல்கிறார் தமிழக முதல்வர். அதே பகுதியை சேர்ந்தவர் தான் மனுநீதி சோழன். பசுவுக்கு நீதி வழங்கியதை போல தன் மகன் என்று பாராமல் தமிழக முதல்வர் துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஹெச்.ராஜா

இதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் முதல்வர், பிரதமர் உடன் அதிக நேரம் சந்தித்து பேசியது, குறித்து சமீபத்தில் கரூரில் விமர்சித்து இருந்தார். அறியாமையால் ஒரு சிலர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. சமீபத்தில் கூட அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு நடைபெற்றது. சீமான் ஒரு பொழுதுபோக்கு நபர். அவர் கூறுவதை கேட்டு சிரித்து விட்டு விட்டு விடலாம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY