தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாநட்டில் கட்சிக்கான கொள்கை பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். `என்நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும்
அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன்!’ என விஜய்யின் குரலும் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச தொடங்கிய கழக தலைவர் விஜய் தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு குட்டி கதையுடன் தொடங்கினார்.
பேச தொடங்கிய அவர் “ஒரு குழந்தை முதன் முதலாக அம்மானு சொல்லும்போது அவங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிரிப்பு பத்தி அவங்களாக தெளிவாக சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்ததுனு கேட்டால் அந்த குழந்தைக்கு எப்படி சொல்லும்? குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசத்துடன் மழலையுடன் சிரிக்க மட்டும்தான் தெரியும்.
அந்த உணர்வை சிலாகிச்சு அந்த குழந்தையால சொல்ல முடியாதுல. அப்படி ஒரு உணர்வோடதான் உங்க முன்னாடி நான் நிற்கிறேன். அம்மாகிட்டகூட தன்னுடைய உணர்வை சொல்ல தெரியாமல் இருக்கிற அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பாம்பு வந்து படமெடுக்குதுனு வைங்க….எல்லோரும் பாம்பை கண்டதும் ஓடிடுவாங்க. `பாம்பை கண்டால் படையே நடுங்கும்’னு ஒரு பழமொழியே இருக்கு. தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட அந்த பாம்பையும் கொஞ்சம்கூட அலட்டிக்காமல் கையில பிடிச்சு விளையாடும்.
அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையானு ஒரு கேள்வி வரும். பாச உணர்வையே என்னனு சொல்ல தெரியாத குழந்தைக்கு பயம்னா மட்டும் என்னனு சொல்ல தெரியும். இங்க அந்த பாம்புதான் அரசியல். அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்கள்….! அரசியலுக்கு நாம குழந்தைதான் .
இது மற்றவர்களுடைய கருத்து. ஆனா, பாம்பாக இருந்தாலும் பயம் இல்லைங்கிறதுதான் நம்முடைய நம்பிக்கை. அரசியல் சினிமா கிடையாது. அரசியல் போர்களம் ஆச்சே! பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸாக இருந்தாலும் கையில எடுக்கணும்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சீரியஸ்னெஸுடன் சிரிப்பையும் கலந்து செயல்படுறதுதான் நம்ம ஸ்டைல். அப்படி இருந்தால்தான் இந்த களத்துல எதிர்ல நிற்கிறவர்களை சமாளிக்க முடியும்.” என்றார்