Tamil News Live Today: “பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” – ஈரான் மீதான தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

நேற்று இரவு பெய்த கனமழையால் முல்லை நகர் மற்றும் மகாத்மா காந்தி நகர் சுற்றுப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு

ஈரானை தாக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் என தொடங்கிய போர், தற்போது இஸ்ரேல் – லெபனான், இஸ்ரேல் – ஈரான் என விரிவடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தற்போது ஈரானின் ராணுவ முகாம்களை குறிவைத்து கடுமையான தாக்குதலை தொடங்கிட்யுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் அதன் ஆதரவாளர்களும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் தாக்குதல்கள் நடைபெற்றது. .

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும், கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.” என கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs