“டிரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் 1 மில்லியன் டாலர்!” – எலான் மஸ்க் அறிவிப்பு; தடை விதித்த கோர்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு அமெரிக்க கோர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரசாரம் செய்திருந்தார்.

எலான் மஸ்க், டிரம்ப்

அப்போது அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசும் வழங்கி வருகிறார். எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க கோர்ட்டும் எலான் மஸ்க்கை எச்சரித்து இருக்கிறது. மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள், கூட்டாட்சி சட்டத்தை மீறக்கூடியதாகவும், மக்கள் வாக்களிப்பதற்கு பணம் அளிக்கும் செயலாகவும் இருப்பதால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கோர்ட் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக தேர்தல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜார்ஜ் டவுன் சட்டக்கல்லுாரி பேராசிரியரான டேனியல் லாங் எலான் மஸ்க்கின் பரிசு அறிவிப்பு, நீதித் துறையின் சிவில் அல்லது குற்றவியல் அமலாக்கத்திற்கு உட்பட்டது. பரிசு வாங்குபவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணம் கொடுப்பது சட்டவிரோதமானது என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs