முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நேற்று (அக்டோபர் 24) சென்னையில் நடைபெற்றது.
முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அவர், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கியதில் மகிழ்ச்சி. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு. விளையாட்டுத்துறையைச் சிறப்பாகக் கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தம்பி உதயநிதி. துறையும் வளர்ந்திருக்கிறது, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை
தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக செஸ் ஒலிம்பியாட் அமைந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தைத் தருகிறது. விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள தங்களின் குழந்தைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்குத் திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs