ரூ.28000 கோடி மோசடி; எஸ்கேப் ஆன நீரவ் மோடியின் கடையை ரூ.47 கோடிக்கு வாங்கிய நடிகை!

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப கட்டாமல் மோசடி செய்துவிட்டு பிரிட்டனில் சென்று தங்கி இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு இந்தியாவில் இருக்கும் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு கையகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

நீரவ் மோடி

2018ம் ஆண்டு நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிறகுதான் அவரது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

நீரவ் மோடிக்கு மும்பையில் மியூசிக் ஸ்டோர் ஒன்று இருந்தது. ரிதம் ஹவுஸ் என்ற பெயரில் இருந்த அக்கடை மிகவும் பழமையானது. 1940ம் ஆண்டு இக்கடை திறக்கப்பட்டது. 3600 சதுர அடி கொண்ட இக்கடை மும்பை காலகோடா பகுதியில் அமைந்துள்ளது.

இக்கடையை அமலாக்கப்பிரிவு கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தி இருக்கிறது. அதனை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை நீரவ் மோடிக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு கொடுக்கும்படி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மியூசிக் அனைத்தும் டிஜிட்டல் மயமானதால் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக மியூசிக் கடை அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இக்கடையை நடிகை சோனம் கபூரும், அவரது கணவர் ஆனந்த் அஹுஜாவும் இணைந்து ரூ.47.80 கோடிக்கு விலைக்கு வாங்கி இருக்கின்றனர். சோனம் கபூர் மாமனார் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சாஹி எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பானே நிறுவனம் இந்த கடையை விலைக்கு வாங்கி இருக்கிறது. மியூசிக் கடையை மிகப்பெரிய ஜூவல்லரி ஸ்டோராக மாற்ற சோனம் கபூர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். சோனம் கபூரும், ஆனந்த் அஹுஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb