நடிகர் விஜய் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே கட்சித் தொடர்பான ஆலோசனைகள், அதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, அதிகாரப்பூர்வமாக கட்சியையும் பதிவு செய்தார்.
மேலும், கட்சியின் கொடி, கட்சியின் பாடல் வெளியீடு என அடுத்தக்கட்ட கட்சியின் அடையாள முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டது. அப்போதே கட்சியின் மாநாடு தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
ஆனால், அந்த மாநாடு எங்கே? எப்போது? நடக்கும் என்பதில் சில சலசலப்புகள் இருந்தாலும், வரும் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அந்த மாநாடு நடத்தப்படும் உறுதியாக அறிவிக்கப்பட்டது.
அப்போது முதலே கட்சித் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக மாநாடு பந்தல் அமைப்பது முதல், மாநாட்டுக்கு செல்வதற்கான பஸ் புக்கிங் வரை பல்வேறு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பிரமாண்ட மாநாட்டுத் திடல், பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு ஏற்பாடு, அடிப்படை வசதிகள், மருத்துவ உதவி, அவசர உதவி என அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது, மாநாட்டுக்கு ஆள்சேர்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாநாட்டுப் பணிக்காக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்தக் குழுதான் மாநாட்டுக்கான மக்களை திரட்டுதல், அவர்களை ஒருங்கிணைத்து மாநாட்டுக்கு அழைத்து வருதல், அவர்களுக்கான வசதிகளை மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டுக்காக மக்களை அழைக்கும் பணியின் அந்தப் பகுதி தொண்டரணி ஈடுபட்டது. அதற்காக இலவச தேநீர் வழங்கு விழா முன்னெடுக்கப்பட்டது. அதற்காக இலவச டோக்கன் வழங்கப்பட்டு, அங்கு மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். அப்போதே கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs