Samsung: “தொழிற்சங்கம் அமைக்கலாம்.. ஆனா சாம்சங் பெயரில் கூடாது” – நீதிமன்றத்தில் வாதிட்ட சாம்சங்!

தொழிற்சங்கம் அங்கீகாரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 15-ம் தேதி வரை போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது, 6 கட்ட தோல்வி பேச்சுவார்த்தை…என பல கட்டத்தை தாண்டி தான் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

இதன் பின்னர், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு, பதிவு செய்ய தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத் துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அது சம்பந்தமாக தொழிலாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு சாம்சங் நிர்வாக தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை நீதிபதி மஞ்சுளா ஏற்றிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. “தொழிலாளர்களின் போராட்டத்தால் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலர் (ரூ. 840 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல. அதனால், நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தாமல், தொழிற்சங்கத்தை தொடங்கிக்கொள்ளலாம்” என்று சாம்சங் சார்பாக வாதிடப்பட்டது.

“சாம்சங் நிறுவனத்தின் பெயரில் தான் கொரியாவில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் இயங்குகிறது. பல தொழிற்சங்கங்கள் அதன் நிறுவனத்தின் பெயரில் தான் தொடங்கப்பட்டுள்ளது” என்று தொழிலாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், நேற்றைய வழக்கு விசாரணையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88