மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், ஓட்டுநர் ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்துக்குள் ஏறிய அந்த நபர், ஸ்டியரிங்க் மீது அமர்ந்து பேருந்தை இயக்க விடாமல் தடுத்தார். மது போதையில் ரகுராமோடு ரகளையிலும் ஈடுபட்டார்.

ரகளை

பயணிகள் அந்த நபரை எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஸ்டியரிங்க் மீது அமர்ந்து வாக்குவாதம் செய்தார். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவிநாசி சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை, விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட நபரைப் பிடித்து பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டு விசாரித்தனர்.

பிரதீப்

அதில் அந்த நபர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதீப் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார் பிரதீப்பை கைது செய்தனர். மது போதையில் பிரதீப் பேருந்தின் ஸ்டியரிங்க் மீது அமர்ந்து ரகளையில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs