“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா ராணுவம்” – அமெரிக்கா குற்றச்சாட்டு

“ரஷ்யா சார்பில் ரஷ்ய – உக்ரைன் போரில் கலந்துகொள்ள 3,000 ராணுவ வீரர்கள் வட கொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, இப்போது வரை நடந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினிடம் இதுகுறித்து வலியுறுத்தினர்.

அக்டோபர் மாதம்…

இந்த நிலையில், தற்போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின், “வட கொரியா ராணுவ படை ரஷ்யாவில் இருப்பதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. உக்ரைன் கூறியதுப்போல, வட கொரியா வீரர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கலந்துகொள்ள ரஷ்யாவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்றால், அது மிக மிக மோசமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, “3,000 வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி மேற்கொள்வதாக அமெரிக்கா நம்புகிறது. இந்த ராணுவ வீரர்கள் கப்பல் மூலம் அக்டோபர் மாதம் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர். இவர்கள் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டால், ரஷ்ய வீரர்களை எதிர்த்து எப்படி உக்ரைன் வீரர்கள் போராடுகிறார்களோ, அதே மாதிரி இவர்களை எதிர்த்தும் அவர்கள் போராடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இது ‘முற்றிலும் பொய்யான செய்தி’ என்று முன்னரே ரஷ்யா மறுத்துள்ளது. வட கொரியா பிரதிநிதிகள் கூட, ‘ஆதரமற்ற புரளி’ என்று கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb