“உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது” – உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

“நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்…” என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க.,வின் 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 23) தேனி மேற்கு மாவட்டம் சார்பில் போடிநாயக்கனூரில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிளைக் கழக செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கி ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று கழகத்தின் பொதுச்செயலாளர் என்கிற உயர்ந்த பொறுப்பில் உள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போல ஆளுமை மிக்க தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார். அவரைப் பற்றிப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

எடப்பாடி பழனிசாமியை விட சீனியர்களான செம்மலை, பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் இருந்தார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி விட்டார்கள் என வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். செம்மலை அப்போது சட்டமன்ற உறுப்பினராகவே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலேயே இல்லை. துணை முதலமைச்சராக இருந்துகொண்டு உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது.

அதிமுக பொதுக்கூட்டம்

நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமனதாகத்தான் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk